காரைக்காலில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டப் பயனாளிகள் தேர்வு
பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டப் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து கருத்துகள் தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டப் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து கருத்துகள் தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் : புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் மூலமாக பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. காரைக்கால் பகுதியில் 5-ஆம் கட்டமாக 329 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
பயனாளிகள் விவரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக தகவல் பலகையிலும், காரைக்கால் மாவட்ட இணைய முகவரியிலும் பார்த்துக்கொள்ளலாம்.
பொதுமக்கள் இத்தேர்வுப் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனை, கருத்துகள் தெரிவிக்க விரும்பினால், புதுச்சேரி குடிசை மாற்று வாரியத்திற்கு ஆக.24-ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.