FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மோட்டார் சைக்கிள்களை திருடிய இருவர் கைது: 4 வாகனங்கள் மீட்பு

காரைக்காலில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடிய இளைஞர் இருவரை திருநள்ளாறு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

காரைக்காலில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடிய இளைஞர் இருவரை திருநள்ளாறு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.
காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் டி.மாரிமுத்து உத்தரவின்பேரில், அம்பகரத்தூர் புறக்காவல் நிலைய உதவி ஆய்வாளர் முகம்மது ஷேக் அலாவுதீன் மற்றும் போலீஸார் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒரு வாகனத்தில் வந்த இருவரிடம், வாகன ஆவணங்களை கோரியபோது அவர்களால் தர இயலவில்லை. சந்தேகத்தின்பேரில் அவர்களை திருநள்ளாறு காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் ஆய்வாளர் எஸ். பாலமுருகன், காவல் சிறப்புப் படை உதவி ஆய்வாளர் ஐ.பிரவீன்குமார் மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம், கூவத்தூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (21), ஆகாஷ் (22) என்பதும், அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயில் அருகே திருநள்ளாறு பூமங்கலம் கிராமம், இளஞ்செழியனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் தெரியவந்தது. மேலும், திருநள்ளாறு பகுதி நல்லம்பல் நவுஷத் அலி என்பவரது மோட்டார் சைக்கிள், காரைக்கால் கீழ ஓடுதுறையைச் சேர்ந்த ராஜா என்பவரது மோட்டார் சைக்கிள் மற்றும் திருப்பட்டினம் பகுதி மேலையூரைச் சேர்ந்த முகம்மது செரீஃப் ஆகியோரது மோட்டார் சைக்கிளையும் இவர்கள் திருடியது தெரியவந்தது. 
இதையடுத்து, அவர்கள் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ஏற்கெனவே திருடிவந்த 3 மோட்டார் சைக்கிள்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதையொட்டி, திருநள்ளாறு, அம்பகரத்தூர் போலீஸாரை மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments