FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் கவனத்துக்கு...

ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் கல்வி ஊக்குவிப்புத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 29 ஜூன் 2018, 1:02 am IST
பகிர்:

ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் கல்வி ஊக்குவிப்புத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த கல்வியாண்டில் 10-ஆவது மற்றும் 12-ஆவது ( எஸ்.எஸ்.எல்.சி., சி.பி.எஸ்.இ.) பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ராணுவ வீரர்கள் குடும்பத்தைச் சேர்ந்த முதல் மூன்று மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படுகிறது. மேலும், இளநிலை, முதுநிலை கல்லூரி படிப்பில் பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவ, மாணவியருக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படுகிறது.
மேலும், தேசிய மற்றும் உலக அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு வெகுமதி வழங்குவதற்கான விண்ணப்பங்களை முப்படை நலத்துறை சார்பில் தகுதியுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் விதவையர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்களை புதுச்சேரி முப்படை நலத் துறை அல்லது காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 31.8.2018-க்குள் முப்படை நலத் துறையில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியான விண்ணப்பங்களை பரிசீலித்து ரொக்கப் பரிசு  வழங்கும் நாள், முப்படை நலத்துறையால் பின்னர் அறிவிக்கப்படும். காலம் கடந்து சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments