FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு

புதுச்சேரி கல்வித்துறையைக் கண்டித்து வரும் 29-ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

Updated On : 25 மே 2018, 12:41 am IST
பகிர்:

புதுச்சேரி கல்வித்துறையைக் கண்டித்து வரும் 29-ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
காரைக்கால் பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் அ.முத்தையா, பொதுச்செயலர் ந.சிவகுமார் ஆகியோர் இதுகுறித்து வியாழக்கிழமை கூறியது :
காரைக்கால் அரசுப் பள்ளிகளில் தலைமையாசிரியர் நிலை 2-க்கான காலிப் பணியிடங்கள் 25, நிலை 2-க்கான காலிப் பணியிடங்கள் 7, மற்றும் 59 ஆசிரியர்கள் (டிஜிடி), 19 விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலி தொடர்கிறது. இந்த காலிப் பணியிடங்களை மாணவர் நலன் கருதி வரும் கல்வியாண்டு தொடங்கும் முன் நிரப்பிட தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். ஆனால் கல்வித்துறை மெத்தனமாக இருக்கிறது.
மேலும் காரைக்காலில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக புதுச்சேரி பிராந்தியத்தை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றிவருகின்றனர். இவர்களை மாற்றல் விதிகளின்படி பணியிட மாற்றம் செய்ய தொடர்ந்து வலியுறுத்தியும் நிறைவேற்றப்படவில்லை.
விடுமுறை காலத்தில் தலைமையாசிரியர் இல்லாத பள்ளிகளில் பொறுப்புகளைப் பார்ப்பதில்லை எனவும், ஜூன் மாதம் 4-ஆம் தேதி அவ்வாறான பள்ளிகளின் சாவியை முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைப்பது எனவும் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பதவிகள் காலியாக இருப்பதால், அந்தப் பணிகளை டிஜிடி ஆசிரியர்கள் யாரும் கூடுதலாகப் பார்ப்பதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றை புதுச்சேரி அரசின் கவனத்துக்கு தெரிவிக்கும் வகையில் வரும் 29-ஆம் தேதி முதல் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகில், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments