FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

காரைக்கால் எஸ்.ஆர்.வி.எஸ். நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் மழலையர்களுக்கான அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

காரைக்கால் எஸ்.ஆர்.வி.எஸ். நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் மழலையர்களுக்கான அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் கண்காட்சி அரங்கை பள்ளித் தாளாளர் கே.செல்லையன் தொடங்கிவைத்தார். பள்ளி முதல்வர் எஸ்.கந்தசாமி, துணை முதல்வர் தே.சுமதி, தலைமையாசிரியர் ஜி.ராஜேந்திரன் ஆகியோர் கண்காட்சியில் பங்கேற்ற சிறார்களைப் பாராட்டிப் பேசினர். சுமார் 100 சிறார்கள் கண்காட்சியில் பங்கேற்று, பள்ளி மாதிரி, பழ வகைகள், நீர் வாழ் விலங்குகள், அதன் இருப்பிடங்கள், சாலை விதிகள், போக்குவரத்து சாதனங்கள், பூங்கா, சத்தான உணவு வகைகள் என பல்வேறு படைப்புகளை காட்சிப் பொருளாக வைத்திருந்தனர். நடுவர் குழுவினரிடம் அதற்கான விளக்கத்தை சிறார்கள் விளக்கினர். சிறந்த படைப்புகள் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டன. 1 முதல் 5- ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள்  கண்காட்சியை பிற வகுப்பு மாணவ, மாணவியரும், பெற்றோர்களும் பார்த்து மகிழ்ந்தனர். ஏற்பாடுகளை பள்ளி அறிவியல் ஆசிரியர்கள், வகுப்பாசிரியர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments