FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இன்று முதல் மின் கட்டண வசூல் மையங்கள் செயல்படும்

காரைக்காலில் வெள்ளிக்கிழமை முதல் (ஏப்ரல் 24) மின் கட்டண வசூல் மையங்கள் செயல்படும் என மின்துறை தெரிவித்துள்ளது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

காரைக்காலில் வெள்ளிக்கிழமை முதல் (ஏப்ரல் 24) மின் கட்டண வசூல் மையங்கள் செயல்படும் என மின்துறை தெரிவித்துள்ளது.

காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் :

பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த ஏதுவாக, மின்துறையின் காரைக்கால் கோட்டத்திற்கு உட்பட்ட மின்துறை தலைமை அலுவலகம் (கிராம்புத்தோட்டம்), நேருநகா், கோட்டுச்சேரி, திருப்பட்டினம், திருநள்ளாறு, நெடுங்காடு ஆகிய மின் அலுவலக வசூல் மையங்களில் ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் அனைத்து வேலை நாள்களிலும் காலை 9 முதல் பகல் 12 மணி வரை செயல்படும்.

Advertisement

Advertisement

இட நெருக்கடி காரணமாக மற்ற வசூல் மையங்கள் ஊரடங்குத் தளா்த்தப்பட்ட பின் இயங்கும். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த முதல் வாய்ப்பாக இணையதள சேவை மூலம் மின் கட்டணத்தை செலுத்தலாம்.

ஆன்லைன் வாயிலாகவும், கைப்பேசி செயலி வாயிலாகவும் செலுத்தலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments