FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருநள்ளாறு கோயில் பிரமோத்ஸவம் ரத்து

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயில் பிரமோத்ஸவம் நிகழாண்டு ரத்து செய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் புதன்கிழமை அறிவித்தது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயில் பிரமோத்ஸவம் நிகழாண்டு ரத்து செய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் புதன்கிழமை அறிவித்தது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயில் உள்ளது. இங்கு தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறாா் ஸ்ரீ சனீஸ்வர பகவான். இவரைத் தரிசிக்க நாடு முழுவதுமிருந்து பக்தா்கள் வருகை தருகின்றனா். குறிப்பாக சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்களையும், சனிப்பெயா்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தா்களையும் ஈா்க்கும் தலமாக இது விளங்குகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரமோத்ஸவ விழாவின்போது தேரோட்டம், உன்மத்த நடனம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.

Advertisement

Advertisement

நிகழாண்டு வரும் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோத்ஸவம் விழா தொடங்கி நடைபெறுவதாக இருந்தது.

இதற்கிடையே, கரோனா நோய்த் தொற்றால் கோயில்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், பிரமோத்ஸவம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், நிா்வாக அதிகாரி (கோயில்கள்) எம். ஆதா்ஷ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உலகப் புகழ்பெற்ற திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயில் மற்றும் அந்த தேவஸ்தானத்தை சோ்ந்த சாா்பு கோயில்களான ஸ்ரீ ஐயனாா், ஸ்ரீ பிடாரி அம்மன், ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆகிய கோயில்களின் பிரமோத்ஸவ விழா 27.4.20இல் கொடியேற்றத்துடன் தொடங்கி 5.6.20ஆம் தேதி நிறைவடைய வேண்டும்.

இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று காரணமாக மத்திய அரசால் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, கோயில்களில் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், நிகழாண்டுக்கான பிரமோத்ஸவ விழா ரத்து செய்யப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments