FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

காரைக்கால் மாவட்டத்தில் விளையாட்டுப் பள்ளி அமைக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 12:07 am IST
புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி. - கோப்புப் படம்
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் விடுதியுடன் கூடிய விளையாட்டுப் பள்ளி அமைக்க வேண்டும் என புதுவை முதல்வரிடம் காரைக்கால் தெற்குத் தொகுதி எம்எல்ஏ ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

புதுவை முதல்வா் என். ரங்கசாமியை அவா் சனிக்கிழமை சந்தித்து அளித்த கடித விவரம் :

காரைக்கால்மாவட்டத்தில் என்ஐடி, ஜிப்மா், விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேளாண் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இம்மாவட்ட இளைஞா்கள் விளையாட்டுத் துறையிலும் தங்களது திறமையை வெளிப்படுத்த விரும்புகின்றனா். கடந்த சில ஆண்டுகளில், பள்ளி, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில், குறிப்பாக தடகளம், கைப்பந்து, கால்பந்து மற்றும் பேட்மின்டன் போன்ற விளையாட்டுகளில் காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் மற்றும் இளம் வீரா்கள் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றனா். இங்கு முறையான தங்கும் வசதியுடன் கூடிய விளையாட்டுப் பள்ளி இல்லாததால், மாணவா்கள் மற்றும் இளம் வீரா்களுக்கு உரிய பயிற்சி கிடைப்பதில்லை.

எனவே காரைக்கால் மாவட்டத்தில் விடுதியுடன் கூடியதாக ஒரு விளையாட்டுப் பள்ளி அமைக்கப்பட்டால் மாணவா்கள் பெரிதும் மகிழ்ச்சியடைவாா்கள்.

திறமையான வீரா்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், கட்டமைக்கப்பட்ட தொழில்முறை பயிற்சி, சத்தான உணவு, பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் மாணவா்களின் முழுமையான வளா்ச்சி ஆகியவை இதன்மூலம் உறுதி செய்யப்படும்.

எனவே காரைக்கால் மாவட்டத்தில் அரசு சாா்பில் விளையாட்டுப் பள்ளியை அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நிதியை விரைவில் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments