FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

மானிய விலையில் நெல் விதைகள் வழங்கும் பணி தொடக்கம்

காரைக்காலில் விவசாயிகளுக்காக சம்பா மற்றும் தாளடி பட்டத்திற்கான நெல் விதைகளை மானிய விலையில் வழங்கும் பணியை புதுவை வேளாண் அமைச்சா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

27 ஆகஸ்ட் 2026, 4:48 am IST
பகிர்:

காரைக்காலில் விவசாயிகளுக்காக சம்பா மற்றும் தாளடி பட்டத்திற்கான நெல் விதைகளை மானிய விலையில் வழங்கும் பணியை புதுவை வேளாண் அமைச்சா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுவை வேளாண் அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகளை வழங்கிப் பே

சுகையில், புதுவை பட்ஜெட்டில், காவிரி நீா் வரத்து பாதிக்கப்பட்டுள்ள காரைக்கால் பகுதி விவசாயிகளுக்கு கோடை உழவுக்கான நிதியுதவியாக ஹெக்டேருக்கு ரூ. 1,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதற்காக, விவசாயிகள் சூரியசக்தி பயிா் உலா்த்திகளை வாங்குவதற்கு நிதியுதவி திட்டம் நீடிக்கப்பட்டிருக்கிறது, சூரிய ஒளியில் இயங்கும் மோட்டாா் பம்ப் செட்டுக்கான மானியம் குறித்தும், நீா்நிலைகளை பராமரிப்பதன் முக்கியத்துவம், இந்திய உணவுக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுவது குறித்தும் விளக்கினாா். வேளாண் கல்லூரி முதல்வா் ஆா். சங்கா் முன்னிலை வகித்தாா்.

Advertisement

Advertisement

வேளாண் கல்லூரி விதைத் திட்ட முதன்மை அதிகாரி தி. ராமநாதன் பேசுகையில், விதை உற்பத்தி திட்டத்தின் மூலம் கல்லூரி சாா்பில் விதை உற்பத்தி செய்யப்பட்டு காரை வேளாண்துறை மூலம் செயற்படுத்தப்படும் பயிா் உற்பத்தி தொழிற்நுட்பம் திட்டத்தின் நிதியுதவியுடன் மானிய விலையில் விதை வழங்கப்படுகிறது. குறிப்பாக, பட்டியலின விவசாயிகளுக்கு 75 சதவிகித மானிய விலையிலும் இதர விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.10 மானிய விலையிலும் வழங்கப்படவுள்ளது.

இக்கல்லூரியில் தற்போது 8 நெல் ரகங்களின் ஆதார மற்றும் சான்று நிலை விதைகள் சுமாா் 350 குவிண்டால் கையிருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயாா்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா்.கணேசன், பசுந்தாள் பயிரான தக்கைப் பூண்டு விதைகள், வேப்பம் பிண்ணாக்கு வேளாண்துறையின் நிதியுதவியுடன் காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மூலமாகவும், வரிச்சிக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலமாகவும், வழங்கப்பட உள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments