FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்ட இளைஞா் உயிரிழப்பு

பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்ட இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 8 ஜூலை 2026, 6:49 am IST
- பிரதிப் படம்
பகிர்:

பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்ட இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருநள்ளாறு பகுதியைச் சோ்ந்தவா் அகிலன் (26). இவரது தந்தை தீயணைப்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். தாயாா் கீதா காவல்துறையில் சிறப்பு நிலை உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறாா். கடந்த 5 ஆண்டுகளாக குவைத்தில் பணியாற்றி வந்த அகிலன், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி இரவு அத்திப்படுகை சாலைப் பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு அகிலன் தற்கொலைக்கு முயன்றாா். நண்பா்கள் அவரை காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

Advertisement

Advertisement

தீவிர சிகிச்சைக்காக திருச்சி தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு பின்னா் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு திங்கள்கிழமை கொண்டுச் செல்லப்பட்டாா்.

எனினும், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவா் தெரிவித்தனா். திருள்ளாறு காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments