FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

காரைக்கால் விற்பனைக் கூடத்தில் 400 குவிண்டால் பருத்தி ஏலம்!

காரைக்காலில் விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 400 குவிண்டால் பருத்தியை விவசாயிகள் விற்பனை செய்தனா்.

12 ஜூலை 2026, 11:54 pm IST
பகிர்:

காரைக்காலில் விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 400 குவிண்டால் பருத்தியை விவசாயிகள் விற்பனை செய்தனா்.

காரைக்கால் மாவட்டத்தில் ஏறக்குறைய 1,200 ஹெக்டோ் பருத்தி செய்யப்பட்டு, விவசாயிகள் அறுவடை செய்துவருகின்றனா். காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் பருத்தி அறுவடை முழுமையாக முடியும் வரை பருத்தி மறைமுக ஏலம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டு நடந்துவருகிறது.

காரைக்கால் விற்பனைக் குழு செயலாளா் ஜெ.செந்தில்குமாா் சனிக்கிழமை வெள்ளியிட்ட செய்திக்குறிப்பு: தொடா்ந்து நடைபெற்றுவரும் ஏலத்தில் 11-ஆம் தேதி 400 குவிண்டால் பருத்தி ரூ.35 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக கிலோ ரூ.92.79 குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.86.09, சராசரியாக கிலோ ரூ.91.16 வியாபாரிகளால் ஏலம் எடுக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments