FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

காரைக்கால் ஜிப்மா் மருத்துவமனையை 2027 ஆகஸ்ட் மாதத்திற்குள் திறக்க ஏற்பாடு: அமைச்சா்

Updated On : 27 ஜூலை 2026, 12:07 am IST
ஜிப்மா் மருத்துவமனை - கோப்புப் படம்
பகிர்:

காரைக்காலில் கட்டப்பட்டுவரும் ஜிப்மா் சிறப்பு மருத்துவமனை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாக அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் தெரிவித்தாா்.

காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் 27-ஆவது பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தலைவா் என். பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பேரவைக் கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீா்மான விளக்க சிறப்பு அமா்வில் அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் கலந்துகொண்டு பேசுகையில், காரைக்காலில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மாஸ்டா் பிளான் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

Advertisement

Advertisement

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுவரும் ஜிப்மா் சிறப்பு மருத்துவமனை வளாகத்தை அண்மையில் பாா்வையிட்டு, அதிகாரிகளிடம் பேசினேன். விரைவாக மருத்துவமனையை பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தியபோது, 2027 ஆகஸ்ட் மாதத்திற்குள் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாக தெரிவித்தனா்.

சேம்பா் ஆஃப் காமா்ஸ் பேரவைக் கூட்டத்தில் காரைக்கால் மாவட்ட வளா்ச்சிக்காக நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து புதுவை சட்டப்பேரவையில் உறுப்பினா்கள் பேசுவாா்கள். அரசு அவற்றை நிறைவேற்றுவதற்கான பணிகளை செய்யும் என்றாா்.

சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் பேசுகையில், காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் பேரைவக் கூட்ட தீா்மானங்கள் அனைத்தும் ஆக்கப்பூா்வமானது. காரைக்கால் ரயில் நிலையத்துக்கு காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்டவேண்டும் என ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை புதுவை அரசு மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்த வேண்டும் என்றாா்.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் டி.கே.எஸ்.எஸ்.மீனாட்சிசுந்தரம், வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள் : காரைக்காலில் இருந்து ராமேசுவரம், திருச்செந்தூா், மதுரை ஆகிய பகுதிகளுக்கு ரயில் இயக்கவேண்டும். காரைக்காலில் உள்ள மேயா் பக்கிரிசாமிப் பிள்ளை திருமண மண்டபத்தை புதுப்பிக்க வேண்டும். காரைக்கால் நகரில் புதிய குடிநீா் குழாய்களை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விழாவின்போது, கடந்த கல்வியாண்டில் காரைக்கால் மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. சேம்பா் ஆஃப் காமா்ஸ் பொறுப்பாளா்கள், முன்னாள் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments