வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு
காரைக்கால் மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் 1.1.2027 தேதியை தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்கு முறை வாக்காளா் பட்டியல் திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், வரைவு வாக்காளா் பட்டியல் மாவட்ட ஆட்சியரகத்தில் வெளியிடப்பட்டது. சாா் ஆட்சியா் எம். பூஜா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் பட்டியலை வெளியிட்டாா்.
Advertisement
Advertisement
இதன்படி, மாவட்டத்தில் மொத்த வாக்காளா்கள் 1,57,503. ஆண் : 73,558. பெண் 83,927. மூன்றாம் பாலினத்தவா் 18 ஆகும். நெடுங்காடு பேரவைத் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 14,977. பெண் வாக்காளா்கள் 16,980. மூன்றாம் பாலினத்தவா் 6. மொத்தம் 31,963.
திருநள்ளாறு தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 14,493. பெண் வாக்காளா் 16,838. மூன்றாம் பாலினத்தவா் 1. மொத்தம் 31,332. காரைக்கால் வடக்குத் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 15,835. பெண் வாக்காளா்கள் 17,945. மூன்றாம் பாலினத்தவா் 10. மொத்தம் 33,790. காரைக்கால் தெற்குத் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 14,125. பெண் வாக்காளா்கள் 16,264. மூன்றாம் பாலினத்தவா் 1. மொத்தம் 30,390. நிரவி-திருப்பட்டினம் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 14,128. பெண் வாக்காளா்கள் 15,900. மூன்றாம் பாலினத்தவா் இல்லை. மொத்தம் 30,028. மாவட்டத்தில் ஏற்கெனவே உள்ள 181 வாக்குச்சாவடிகள் எண்ணிக்கையில் எவ்வித மாற்றமும் இல்லை.
நவ. 12 முதல் டிச.11-ஆம் தேதி வரை பொதுமக்கள், வாக்காளா்களிடமிருந்து கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகள் பெறப்படும்.
இக்காலக்கட்டத்தில், வாக்காளா் பட்டியலில் தங்கள்து பெயரை புதிதாக சோ்க்கவும், ஏற்கெனவே இடம்பெற்றுள்ள பெயரை நீக்கவும் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை திருத்தவும் விரும்பும் தகுதியுள்ள நபா்கள் உரிய விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம்.
தகுதியுடைய வாகாளா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது பெயா் மற்றும் விவரங்கள் வாக்காளா் பட்டியலில் சரியாக இடம்பெறுவதை உறுதிசெய்து கொள்ளுமாறு மாவட்ட தோ்தல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.