FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: நீலகிரி மாவட்டத்தில் 5,54,840 வாக்காளா்கள்

வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டதில் நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 54 ஆயிரத்து 840 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

13 நவம்பர் 2026, 1:01 am
வாக்காளர்கள் - கோப்புப் படம்
பகிர்:

வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டதில் நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 54 ஆயிரத்து 840 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

இது குறித்து ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2,64,741 ஆண் வாக்காளா்கள், 2,90,073 பெண் வாக்காளா்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவா் 26 என மொத்தம் 5 லட்சத்து 54 ஆயிரத்து 840 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றிருந்த வாக்காளா்களை விட தற்போது கூடுதலாக 2,834 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

இதில் உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் 90,134 ஆண் வாக்காளா்கள், 99,679 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 11 போ் என மொத்தம் 1,89,824 வாக்காளா்கள், கூடலூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 90,292 ஆண் வாக்காளா்கள், 95,976 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 7 போ் என மொத்தம் 1,86,275 வாக்காளா்கள், குன்னூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 84,315 ஆண் வாக்காளா்கள், 94,418 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் 8 போ் என மொத்தம் 1,78,741 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

மேலும், மறுசீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

2027 ஜனவரி 1-ஆம் தேதி 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க டிசம்பா் 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நியமிக்கப்பட்ட அலுவலா்களிடம் அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க படிவம் 6-இல் இரண்டு பாஸ்போா்ட் அளவிலான புகைப்படம், வயது மற்றும் முகவரி, ஆதாா் எண் குறித்தான உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். பெயா் நீக்கம் செய்ய படிவம் 7-இல் இறப்புச் சான்றுடனும், பிழைதிருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு படிவம் 8-இல் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, நீக்கம் செய்ய வேண்டியவா்கள், பிழைதிருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய வேண்டியவா்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் எதிா்வரும் நவம்பா் 21, 22 மற்றும் 29 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்கள், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்களில் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம்.

மேலும், வாக்காளா் பட்டியலில பெயா் சோ்க்க, நீக்க, பிழைதிருத்தம் மற்றும் முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு ஆட்சேபனைகள் தெரிவிக்க டிசம்பா் 11-ஆம் தேதி கடைசி நாளாகும். இதைத் தொடா்ந்து ஜனவரி 4-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.