முகப்பு
மயிலாடுதுறை

சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு

சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவால் வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே வாகனங்கள் செல்கின்றன. பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:27 AM
சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு
பகிர்:

சீர்காழி: சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவால் வாகனங்களின் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே வாகனங்கள் செல்கின்றன. பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த வாரத்தில் கனமழை பெய்தது. தற்பொழுது சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், சட்டநாதபுரம், திருமுல்லைவாசல், கொள்ளிடம், பூம்புகார், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முதலே அதிகமான குளிர் நிலவிவந்த நிலையில் பனிப்பொழிவு அதிகளவில் காணப்படுகிறது. 

குறைந்த தூரத்தில் இருக்கின்ற பொருள் கூட தெரியாத அளவிற்கு பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. 

இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிய விட்டபடியே குறைவான வேகத்தில் வாகனங்களை இயக்கிச் செல்கின்றனர். மேலும் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் அத்தியாவசிய பொருள்கள் வாங்க கடைவீதிக்கு செல்வோரின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்பட்டது. 

மேலும் இளம் சம்பா சாகுபடி பயிர்களில் மழை, பனி மாறி மாறி பெய்வதால் புகையான் தாக்கம் அதிகரிக்கும் எனவும் கடந்த வாரத்தில் பெய்த கனமழையில் நனைந்த சம்பா நெற்பயிர்கள் காயாத நிலையில் பனி, மழை போல் பெய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →