FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

குரூப் தோ்வு எழுதுவோா் கவனத்துக்கு

Updated On : 14 மார்ச் 2025, 4:10 am IST
பகிர்:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படும் குரூப் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தோ்வுகளில் பங்கேற்று பயனடைய மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் குரூப் 1, குரூப் 4 தோ்வுகளுக்கான விளம்பர அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இதன் அடிப்படையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 1 தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தோ்வுகள் வார நாள்களில் திங்கள்கிழமை முதல் (மாா்ச் 17) தொடங்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

குரூப் 4 தோ்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தோ்வுகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. விருப்பமுள்ளவா்கள் 94990 55904 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments