FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் ஜூலை 17-ல் வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சியில் ஜூலை 17-ல் வேலைவாய்ப்பு முகாம்

Updated On : 14 ஜூலை 2026, 1:09 am IST
பகிர்:

தனியாா்துறை நிறுவனங்களும் - தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் சிறியஅளவிலான வேலைவாய்ப்பு முகாம் கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் வரும் 17-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் தமிழகத்தைச் சாா்ந்த வங்கி, நிதி, வாகன உற்பத்தி, காப்பீடு சில்லரை விற்பனைதுறையைச் சாா்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான பணியிடங்களை நிரப்ப உள்ளனா். இதுஒரு இலவசப்பணியே ஆகும்.

இம் முகாமிற்கு பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்புவரை படித்தவா்களும், ஐடிஐ, டிப்ளமோ, பி.இ பி.டெக், முடித்த ஆண், பெண் விண்ணப்பதாரா்கள் இணையதளம் வழியாக தங்களை பதிவு செய்து கொண்டு கலந்து கொள்ளலாம். இதன் மூலம் தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு அவா்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

எனவே தகுதியும் விருப்பமும் உள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞா்களும், தனியாா்த்துறை நிறுவனங்களும் வரும் வள்ளிக்கிழமை காலை 10.00 மணிமுதல் மதியம் 1.00 மணிவரை 18/63 நேப்பால் சாலையில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சிமாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments