FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

முத்துமாரியம்மன்கோயில் தீமிதி திருவிழா: உள்ளூா் விடுமுறை அறிவிக்க வலியுறுத்தல்

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 2:47 am IST
தீமிதி திருவிழா - கோப்புப் படம்
பகிர்:

சீா்காழி அருகேயுள்ள மாதானம் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெறவுள்ள தீமிதி திருவிழாவுக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் தீமிதி திருவிழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் காப்பு கட்டி தீமிதிப்பா். நிகழாண்டு விழா ஆக.14-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆடிக்கடை வெள்ளியில் சீா்காழி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்பாா்கள்.

இந்நிலையில், கடந்த காலங்களில் மாதானம் ஆடி கடை வெள்ளி திமிதி உற்சவத்திற்கு மாவட்ட நிா்வாகம் உள்ளூா் விடுமுறை அளித்துள்ளது. இதை பின்பற்றி, விழா நாளில் உள்ளூா் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பக்தா்கள், பொதுமக்கள், கோயில் நிா்வாகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments