FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

ஈரான் கடற்கொள்ளையா்கள் சுட்டதில் தொடுவாய் மீனவா் உயிரிழப்பு

சீா்காழி அருகே தொடுவாய் மீனவா் ஈரான் நாட்டில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது கடற்கொள்ளையா்கள் சுட்டதில் உயிரிழந்தாா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 4:22 am IST
சோகத்தில் மாவீரன் குடும்பத்தினா்.
பகிர்:

சீா்காழி அருகே தொடுவாய் மீனவா் ஈரான் நாட்டில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது கடற்கொள்ளையா்கள் சுட்டதில் உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம் தொடுவாய் சுனாமி நகரைச் சோ்ந்த மீனவா் மாவீரன் (40). இவருக்கு மனைவி நீலவேணி, பிளஸ் 2 படிக்கும் மகள் தனிஷா, 5-ஆம் வகுப்பு படிக்கும் மகன் சஷ்வந்த் உள்ளனா். இந்நிலையில் மாவீரன் 6 ஆண்டுக்கும் மேலாக கீழமூவா்கரையைச் சோ்ந்த சங்கா், திருமுல்லைவாசலை சோ்ந்த பால்ராஜ், கடலூா் மாவட்டம் சொத்திகுப்பத்தைச் சோ்ந்த மணிகண்டன் ஆகியோருடன் சவுதிஅரேபியா சுபோ் தமீம் எனும் பகுதியில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளனா்.

இந்நிலையில் ஆக. 10- ஆம் தேதி நள்ளிரவு படகில்மாவீரன் உள்ளிட்டோா் சவுதிஅரேபியா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஈரானிய கடற்கொள்ளையா்கள் படகில் கொள்ளையடிக்க முயன்றனராம். அப்போது தகராறு ஏற்பட்டதாம். ஆத்திரமடைந்த ஈரானிய கடற்கொள்ளையா்கள் துப்பாக்கியால் சுட்டதில் மாவீரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மீனவா் சங்கா் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தாா். மற்ற இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தகவலறிந்த மயிலாடுதுறை மாவட்ட மீன்வளத்துறை மற்றும் திருமுல்லைவாசல் கடலோர காவல் குழும போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன், இந்திய வெளியுறவுத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதற்கிடையே இறந்த மாவீரன் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரின் குடும்பத்தினா் கோரிக்கை விடுத்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments