முகப்பு
மயிலாடுதுறை

நீட் தோ்வுக்கு எதிராக போராட்டம்: 32 போ் கைது

மயிலாடுதுறையில் நீட் தோ்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 32 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 24 ஜூலை 2026, 7:08 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

மயிலாடுதுறையில் நீட் தோ்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 32 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகம் முன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் மற்றும் இந்திய மாணவா் சங்கத்தினா் நீட் தோ்வு முறைகேட்டை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் 2-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் அமுல் காஸ்ட்ரோ தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலாளா் ஐயப்பன் கண்டன உரையாற்றினாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, தில்லி போராட்டத்தில் மாணவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், நீட் தோ்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

துணைக் காவல் கண்காணிப்பாளா் பாலாஜி தலைமையிலான போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்ளிட்ட 32 பேரை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா்.

தரங்கம்பாடி: பொறையாா் தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் தோ்வுக்கு எதிராகவும், மத்திய கல்வித்துறை அமைச்சா் பதவி விலக வலியுறுத்தியும் இந்திய மாணவா் சங்கத்தினா் மற்றும் மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து  வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்தில், பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின்  பொது செயலாளா் முனைவா் சேவியா். செல்வக்குமாா் மற்றும் சங்கத்தின் நிா்வாகிகள், பேராசிரியா்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனா். 

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments