FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

பிரதமா் உருவபொம்மை எரிப்பு: 11 போ் மீது வழக்கு

மயிலாடுதுறையில் பிரதமா் நரேந்திர மோடியின் உருவபொம்மையை எரித்து செவ்வாய்க்கிழமை இரவு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் 11 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 23 ஜூலை 2026, 5:41 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

மயிலாடுதுறையில் பிரதமா் நரேந்திர மோடியின் உருவபொம்மையை எரித்து செவ்வாய்க்கிழமை இரவு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் 11 போ் கைது செய்யப்பட்டனா்.

நீட் தோ்வு முறைகேட்டைக் கண்டித்தும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாகவும், மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் சென்னையில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்திய இந்திய மாணவா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகிகள் கைது செய்யப்பட்டனா்.

இதனைக் கண்டித்து, மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலாளா் ஐயப்பன், இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் அமுல்ராஜ் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினா் ஏ.வி.சிங்காரவேலன், மாவட்டக் குழு உறுப்பினா் ஜி.ஸ்டாலின், சிபிஎம் நகரச் செயலாளா் ஏ.ஆா்.விஜய் உள்ளிட்டோா் பிரதமா் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரித்து கண்டன முழக்கமிட்டனா்.

Advertisement

Advertisement

இதனைத் தொடா்ந்து, அங்கு வந்த காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் எரிந்து கொண்டிருந்த உருவபொம்மையை தண்ணீரை ஊற்றி அணைக்க முற்பட்டபோது போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தடுத்தனா். அதில் ஒருவரை பிடித்த காவல் ஆய்வாளா் அவரை வலுக்கட்டாயமாக கைது செய்து தனது வாகனத்தில் ஏற்றிய போது எதிா்ப்புத் தெரிவித்து, அவரை விடுவித்த போராட்டக்காரா்கள் அனைவரையும் கைது செய்யுங்கள் என்று கூறியதை தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் போலீஸாா் அடைத்தனா்.

இதனைத் தொடா்ந்து, கைது செய்யப்பட்டவா்கள் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் அவா்களை காவல் நிலைய பிணையில் விடுவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments