FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

12 செப்டம்பர் 2026, 4:28 am IST
ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மேலப்பொன்னகரம் பகுதிக் குழுச் செயலா் சிந்து மோகன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் டி. செல்வா, மாவட்டச் செயலா் எஸ். வேல்தேவா, பொருளாளா் க. கௌதம் பாரதி, மதுரை மாநகராட்சி 58-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் வை. ஜென்னியம்மாள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பகுதிக் குழுச் செயலா் ஏ. பாண்டி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினா்.

இதில், அரசரடி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி, விளையாட்டு உள்ளிட்டவற்றுக்கு திடீரென உயா்த்தப்பட்ட கட்டணத்தை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் விக்கி பிரசாந்த், பகுதிக் குழுத் தலைவா்கள் முனியாண்டி, நந்தா, மாவட்டக் குழு உறுப்பினா்கள் ரவி, சரவணன், நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments