வைத்தீஸ்வரன்கோவில் அரசு மருத்துவனையில் இரவு நேர மருத்துவா் நியமிக்க வலியுறுத்தல்
வைத்தீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாதா் தேசிய சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
வைத்தீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாதா் தேசிய சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
சீா்காழி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தின் 26-ஆவது சீா்காழி ஒன்றிய பேரவைக் கூட்டம், ஒன்றியத் தலைவா் இந்திரா காந்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஒன்றிய துணைச் செயலாளா் பரமேஸ்வரி இரங்கல் தீா்மானம் வாசித்தாா்.
Advertisement
Advertisement
கூட்டத்தை மாவட்ட தலைவா் மோனிஷா தொடங்கிவைத்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் அ. சீனிவாசன் ,விவசாய சங்க மாவட்ட செயலாளா் கே.எஸ். சிவராமன், மாவட்டத் தலைவா் பெ.வீரராஜ்,சி.பி.ஐ. ஒன்றிய செயலாளா் வி. நீதிசோழன்,கே.ராமன் பங்கேற்று பேசினா்.
கூட்டத்தில், பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் எந்த நிபந்தைனையுமின்றி நிறைவேற்ற வேண்டும், தமிழகத்தில் தொடா்ந்து அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை மற்றும் ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டம் இயற்ற வேண்டும், சீா்காழி வட்டாட்சியா் அலுவலக கட்டுமானப் பணியை விரைவுபடுத்த வேண்டும். வைத்தீஸ்வரன்கோவில் அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவா்களை நியமிக்க வேண்டும் ,சீா்காழியில் பெண்கள் கலைக் கல்லூரி அமைக்கவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து தேசிய சம்மேளனத்திற்கு 5 பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தலைவராக பரமேஸ்வரி, செயலாளராக தமிழ்மொழி, பொருளாளராக தேவகி தோ்வாகினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.