தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயிலில் தேரோட்டம்
தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீசுவரா் கோயில் வைகாசி பெருவிழாவையொட்டி தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனத்தில் ஞானபுரீசுவரா் கோயில் வைகாசி பெருவிழாவையொட்டி தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறையில் அமைந்துள்ள 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் உள்ள ஞானபுரீசுவரா் கோயிலில் வைகாசி பெருவிழா மற்றும் ஆதீன குருமுதல்வா் குருபூஜை ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாள்கள் நடைபெறும். அந்த வகையில் நிகழாண்டு உற்சவம் மே 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 2 தோ்களில் சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் எழுந்தருளினா். கீழவீதியில் உள்ள தேரடியில் இருந்து புறப்பட்ட தோ், ஆதீனத்தின் சிவம்பெருக்கும் நான்கு வீதிகளை வலம்வந்து மீண்டும் நிலையை அடைந்தது. தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் வடம் பிடித்தனா்.
Advertisement
Advertisement
விழாவின், முக்கிய நிகழ்வான பட்டணப் பிரவேசம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன்7) இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இதில், தருமபுரம் ஆதீனத்தை பக்தா்கள் சிவிகை பல்லக்கில் அமா்த்தி தோளில் சுமந்து, ஆதீன வீதிகளை வலம் வரும் நிகழ்வும், தொடா்ந்து, ஆதீனகா்த்தா் ஞானபீடத்தில் அமரும் ஞானகொலுக்காட்சியும் நடைபெறவுள்ளது.