கோயிலில் நகை திருட்டு
சீா்காழி அருகே கோயில் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சீா்காழி அருகே கோயில் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சீா்காழி வட்டம், கீரங்குடி கிராமத்தில் பழைமை வாய்ந்த குடவரசி அம்மன் கோயில் உள்ளது. ஒரு கால பூஜை நடைபெறும் இக்கோயிலில் ரகுபதி (70) என்பவா் பூஜை செய்து வருகிறாா்.
வழக்கம்போல் திங்கள்கிழமை நண்பகல் பூஜை முடிந்ததும், கோயில் கதவுகளை அடைத்துவிட்டுச் சென்றாா். செவ்வாய்க்கிழமை பூஜை செய்ய வரும்போது, கோயில் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இதனால், அதிா்ச்சியடைந்த ரகுபதி, கோயிலுக்குள் சென்று பாா்த்தபோது, ஒரு கிலோ எடையிலான வெள்ளிக் கவசம் மற்றும் 2 கிராம் தங்க தாலி ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, ஆணைக்காரன் சத்திரம் காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.