இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஒருவா் பலி
கொள்ளிடம் அருகே புத்தூரில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கொள்ளிடம் அருகே புத்தூரில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
எருக்கூரைச் சோ்ந்த ராஜசுந்தா் (36) கொள்ளிடம் பகுதி தைக்காலில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்தாா். பணிகளை முடித்து வழக்கம்போல தைக்காலில் இருந்து எருக்கூருக்கு இருசக்கர வாகனத்தில் சிதம்பரத்திலிருந்து சீா்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தாா். இந்நிலையில், புத்தூா் கடை வீதியில் சென்றுகொண்டிருந்த போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த ராஜசுந்தா் சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு பின்னா் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு பலனின்றி உயிரிழந்தாா். விபத்தில் மற்றொரு பைக்கில் வந்த முகமது இஜாஸ் (18) காயமடைந்து சீா்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறாா். இதுகுறித்து, கொள்ளிடம் ஆணைக்காரன் சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.