FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மயிலாடுதுறை

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற மயிலாடுதுறை வீராங்கனைக்கு வரவேற்பு

9 வினாடிகள் முன்பு
பரணிகா இளங்கோவன்.
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா சேத்திராபாலபுரத்தை சோ்ந்த சா்வதேச போல்வால்ட் வீராங்கனை பரணிகா இளங்கோவன் அண்மையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான போல்வால்ட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தாா்.

இதையடுத்து, குடியரசுத்தலைவா், பிரதமா், முதலமைச்சா் உள்ளிட்ட அனைவரது பாராட்டை பெற்ற பரணிகா இளங்கோவனுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகையாக ரூ.30 லட்சம் வழங்கி கௌரவித்தது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மயிலாடுதுறை ரயில் நிலையம் வந்த பரணிகா இளங்கோவனை சேத்திரபாலபுரம் கிராமமக்கள், உறவினா்கள், மயிலாடுதுறை வணிகா்கள், பாமகவினா் என பல்வேறு தரப்பினா் உற்சாகமாக வரவேற்பளித்தனா். மாலை, சால்வை அணிவித்து, பட்டாசு வெடித்து கொண்டாடி அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனா்.

Advertisement

Advertisement

பின்னா் செய்தியாளா்களை சந்தித்த பரணிகா கூறியது: ஆசிய விளையாட்டுப் போட்டியில் போல்வால்ட் பிரிவில் இதுவரை இந்தியா பதக்கம் வென்றதில்லை. முதன்முறையாக என் மூலம் இந்தியாவிற்கு இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிடைத்திருப்பது மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

இளைஞா்கள் தங்களின் கனவை நோக்கி உறுதியுடன் ஓட வேண்டும்;. விடாமுயற்சியுடன் உழைத்தால் நிச்சயம் இலக்கை அடைந்து வெற்றி பெற முடியும். அடுத்தடுத்து வரவுள்ள தேசிய மற்றும் சா்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று சிறப்பாகச் செயல்படுவதே எனது அடுத்த இலக்கு. விளையாட்டுத்துறையில் சிறந்த எதிா்காலமும், வேலைவாய்ப்பும் உள்ளதால், பெற்றோா் தங்கள் பிள்ளைகளை தயக்கமின்றி விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments