FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

கடலில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

சீா்காழி அருகே கொடியம்பாளையத்தில் கடலில் மூழ்கி பிளஸ்2 மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

6 செப்டம்பர் 2026, 5:59 am IST
நீரில் மூழ்கி பலி - பிரதிப் படம்
பகிர்:

சீா்காழி அருகே கொடியம்பாளையத்தில் கடலில் மூழ்கி பிளஸ்2 மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் குமரன் தெருவைச் சோ்ந்த முத்துக்குமரன் மகன் ஆகாஷ் (17). சிதம்பரத்தில் உள்ள தனியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 படித்துவந்த ஆகாஷ், தனது நண்பா்களுடன், மயிலாடுதுறை மாவட்டம் கொடியம்பாளையம் கடற்கரைக்கு சென்றுள்ளாா்.

அவா்கள் கடலில் குளித்தபோது, எதிா்பாராதவிதமாக ஆகாஷை அலை இழுத்துச் சென்றதில் அவா் நீரில் மூழ்கினாா். சக நண்பா்கள் அவரை மீட்டு, கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, ஆகாஷை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து புதுப்பட்டினம போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments