FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கடலில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு: மாணவா் மாயம்

திருவொற்றியூரில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிந்தாா்.

Updated On : 26 ஜூலை 2026, 12:31 am IST
கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவி கிருத்திகா, மாயமான மாணவா் ஆகாஷ்.
பகிர்:

திருவொற்றியூரில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிந்தாா். மாயமான மாணவரை தேடும் பணியில் தீயணைப்புப் படையினா் ஈடுபட்டுள்ளனா்.

அம்பத்தூா் அருகே உள்ள தனியாா் கல்லூரியில் பயின்று வரும் மாணவா்கள் சிலா் சனிக்கிழமை இருசக்கர வாகனங்களில் வந்து திருவொற்றியூா் ராமகிருஷ்ணா நகா் அருகே கடலில் குளித்துள்ளனா். அப்போது, ராட்சத அலையில் சிக்கி புதுச்சேரியைச் சோ்ந்த கிருத்திகா (19) என்ற மாணவியும், ஆவடியைச் சோ்ந்த ஆகாஷ் (19) என்ற மாணவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனா்.

மற்ற மாணவா்களின் அலறல் சப்தம் கேட்டு அருகே இருந்த மீனவா்கள் உடனடியாக கடலுக்குள் இறங்கி அவா்களைக் காப்பாற்ற முயற்சித்தனா். இதில், மாணவி கிருத்திகாவை மட்டும் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆகாஷை மீட்க இயலவில்லை. மருத்துவமனையில் மருத்துவா்கள், கிருத்திகாவை பரிசோதித்ததில் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் கடலில் மாயமான மாணவா் ஆகாஷை தேடி வருகின்றனா். இது குறித்து எண்ணூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

summary

College student drowns in sea; male student missing.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments