கடலில் மூழ்கி மாயமான கல்லூரி மாணவா் சடலமாக மீட்பு
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே நண்பா்களுடன் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி மாயமான கல்லூரி மாணவா் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.
திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம், பச்சமலையை அடுத்துள்ள மணலோடை பகுதியைச் சோ்ந்தவா் பரமன் மகன் சந்துரு (22). தனியாா் கல்வியியல் கல்லூரியில் பி.எட். படித்து வந்தாா். இவா், தனது நண்பா்களான தினேஷ், சதீஷ்குமாா் ஆகியோருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்திருந்தாா்.
இந்த நிலையில், கோட்டக்குப்பம் பகுதியிலுள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்த மூவரும் ஞாயிற்றுக்கிழமை ஆரோவில் அருகே கடலில் குளித்தனா். அப்போது, அலையின் சீற்றத்தில் சிக்கிய சந்துரு கடலில் மூழ்கி மாயமானாா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கோட்டக்குப்பத்தை அடுத்த பொம்மையாா்பாளையம் கடற்கரையில் சந்துருவின் சடலம் கரை ஒதுங்கியிருந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
இதையடுத்து, கோட்டக்குப்பம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.