FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அலையாத்திக் காடுகளை உருவாக்க வலியுறுத்தல்

கடல் அரிப்பை தடுக்கும் வகையில் அலையாத்திக் காடுகள், மணல் குன்றுகளை உருவாக்க வேண்டும் என்று நில உரிமை கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாகப்பட்டினத்தில் அந்த அமைப்பின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

கடல் அரிப்பை தடுக்கும் வகையில் அலையாத்திக் காடுகள், மணல் குன்றுகளை உருவாக்க வேண்டும் என்று நில உரிமை கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

நாகப்பட்டினத்தில் அந்த அமைப்பின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நாகை மாவட்டத்தில் 13 இடங்களில் தொடங்க உத்தேசித்துள்ள அனல் மின் நிலையங்களை மூட வேண்டும். கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் இயற்கை அரண்களாக விளங்கக்கூடிய அலையாத்திக் காடுகள், மணல் குன்றுகள் உள்ளிட்டவற்றை உருவாக்க வேண்டும்.

கடலோரங்களில் உள்ள இறால் பண்ணைகளை மூட வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இறால் பண்ணைகளை அகற்றாத கண்காணிப்புக் குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தடி நீர் மட்டத்தை பாதிக்கக்கூடிய வகையில் கடற்கரையோரப்பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்க தடை செய்ய வேண்டும். 1970-க்கு முந்தைய நிலையில் இருந்த வடிகால், வாய்க்கால்களை ஆய்வு செய்து தண்ணீர் செல்லும் வகையில் தூர்வார வேண்டும். ஆற்றோரங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அழிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

கூட்டத்துக்கு மாநில இணை பொறுப்பாளர் அரங்க. குணசேகரன் தலைமை வகித்தார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் குமரவேல், நில உரிமை மீட்புகுழு உறுப்பினர்கள் மூர்த்தி, பரசுராம், ராமச்சந்திரன் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments