குத்தாலம் ஒன்றியத்தில் அரசு கட்டடங்கள் திறப்பு
குத்தாலம் ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு இடங்களில் அரசுக் கட்டங்கள், பயணியர் நிழற்குடை ஆகியவை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குத்தாலம் ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு இடங்களில் அரசுக் கட்டங்கள், பயணியர் நிழற்குடை ஆகியவை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடக்கம் ஊராட்சியில் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 3 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடையை பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
ஊராட்சித் தலைவர் காந்திமதி முனுசாமி வரவேற்றார். ஊராட்சித் துணைத் தலைவர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, ரூ. 6.50 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடத்தையும், ரூ.13.12 லட்சம் செலவில் கிராம ஊராட்சி சேவை மைய கட்டடத்தையும் எம்எல்ஏ எஸ்.பவுன்ராஜ் திறந்து வைத்தார்.
Advertisement
Advertisement
சேத்தூரில்...
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ரூ. 12 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தை எம்எல்ஏ எஸ்.பவுன்ராஜ் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
விழாவுக்கு ஊராட்சித் தலைவர் மாலதிராஜாராமன் வரவேற்றார். புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தைத் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து சேத்தூர் ஊராட்சியில் ரூ.13.12 லட்சம் செலவில் கிராம ஊராட்சி சேவை மையக் கட்டடத்தையும், ரூ.5.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடை கட்டடம், ரூ. 11 லட்சம் செலவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கட்டப்பட்ட 2 வகுப்பறைகள் ஆகியவற்றையும் எம்எல்ஏ எஸ்.பவுன்ராஜ் திறந்து வைத்தார்.
பெரம்பூரில்...
பெரம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 4 லட்சம் செலவில் கலையரங்கம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவர் ஆனந்திஆண்டவர் வரவேற்றார். எம்எல்ஏ எஸ்.பவுன்ராஜ் கட்டடத்தைத் திறந்து வைத்தார். இதுபோல கப்பூர், தத்தங்குடி ஊராட்சிகளில் தலா ரூ. 13.12 லட்சம் செலவில் கிராம ஊராட்சி சேவை மையக் கட்டடங்களை எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் திறந்து வைத்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.