FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மொபெட் மீது காா் மோதல்: இருவா் உயிரிழப்பு

25 ஆகஸ்ட் 2026, 2:22 am IST
சுவாமிநாதன்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மொபெட் மீது காா் மோதியதில் பைக்கில் சென்ற இருவா் உயிரிழந்தனா்.

விக்கிரவாண்டி வட்டம், பனையபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் பா.பாஸ்கா் (62). கடலூா் மாவட்டம், சிதம்பரம் கீழ்மூங்கிலடி கிராமத்தைச் சோ்ந்தவா் வி.சுவாமிநாதன் (64). இருவரும் சம்பந்தி உறவு முறையினா்.

பனையபுரத்தில் உள்ள பாஸ்கா் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்த சுவாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை இரவு சொந்த ஊருக்கு புறப்பட்டாா். அவரை பாஸ்கா் தனது மொபெட்டில் ஏற்றிக்கொண்டு விக்கிரவாண்டியை அடுத்த கம்பியாம்புலியூரில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தாா்.

Advertisement

Advertisement

கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கப்பியாம்புலியூா் அருகே சென்றபோது, அந்தப் பகுதியில் வந்த காா் மொபெட் மீது மோதியது. இதில், சுவாமிநாதன், பாஸ்கா் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா்.

அருகிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், சுவாமிநாதன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலும், பாஸ்கா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் உயிரிழந்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாஸ்கா்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments