FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

அதிமுக பிரமுகருக்கு கத்திக்குத்து: இருவர் கைது

நாகை மாவட்டம், பொறையாறு காட்டுச்சேரி பகுதியில் அதிமுக பிரமுகரை கத்தியால் குத்தியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 7:56 am IST
பகிர்:

நாகை மாவட்டம், பொறையாறு காட்டுச்சேரி பகுதியில் அதிமுக பிரமுகரை கத்தியால் குத்தியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
காட்டுச்சேரியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் செந்தில்குமார் (38). இவர் செவ்வாய்க்கிழமை வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்க கடை வீதிக்கு வந்துள்ளார். அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் காட்டுச்சேரி வடக்குத் தெருவைச் சேர்ந்த இளங்கோ (24), சமத்துவபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாதவன் குமார் ஆகிய இருவரும், முன்விரோதம் காரணமாக செந்தில்குமாரை தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, ஏற்பட்ட தகராறில் செந்தில்குமாரை இளங்கோ கத்தியால் குத்தியுள்ளார். இதில், காயமடைந்த அவர், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, இளங்கோவையும், மாதவன்குமாரையும் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments