பொது இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் காலி மதுபுட்டிகள்
பொது இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், மதுபான புட்டிகள் வீசப்படுவதைத் தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
பொது இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், மதுபான புட்டிகள் வீசப்படுவதைத் தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் பிரதான சாலையில், மதுக்கடைகள் அமைந்துள்ளன. இங்கு மதுபானம் அருந்தும் மது பிரியர்கள், காலி புட்டிகளை கண்ட இடத்தில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால், அதன் உடைந்த கண்ணாடி சிதில்கள், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
பெரும்பாலும், சாலையோரத்தில் உள்ள மரங்கள் பகலில் பாதசாரிகளுக்கு பயன்தரும் நிழலாக அமைகின்றன. அதே மரங்கள், இரவு வேளைகளில் மதுபான பிரியர்களின் கூடாரமாக மாறிவிடுகிறது. இது மட்டுமன்றி, பயணிகள் நிழலகம், பள்ளிக் கூடங்கள், அரசு அலுவலகக் கட்டடங்கள் என மது அருந்த பொது இடங்களை மதுபான பிரியர்கள் வெகுவாக நாடுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், காலி மதுபுட்டிகளை ஆங்காங்கே வீசிவிட்டுச் செல்வதால், பொதுமக்கள் இன்னல்களுக்குள்ளாகின்றனர். எனவே, இதுபோன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.