துலாக்கட்ட காவிரியில் நீராடிய யானை
அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மயூரநாதத் திருக்கோயில் யானை அபயாம்பிகை மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஞாயிற்றுக்கிழமை நீராடியது.
அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மயூரநாதத் திருக்கோயில் யானை அபயாம்பிகை மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஞாயிற்றுக்கிழமை நீராடியது.
திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மயிலாடுதுறை அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோயிலில் யானை அபாயம்பிகை இருந்து வருகிறது. இந்த யானையை பாகன்கள் செந்தில் மற்றும் வினோத் ஆகியோர் பராமரித்து வருகின்றனர்.
காவிரியில் தற்போது மேட்டூர் அணை தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், துலாக்கட்ட காவிரிக்கு யானை அபயாம்பிகை அழைத்து வரப்பட்டு, ஆற்றில் இறக்கிவிட்டபின் காவிரியில் உருண்டும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் ஆனந்தமாக நீராடியது. இதை, அங்கு கூடியிருந்த திரளானப் பக்தர்கள் பார்த்து ரசித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.