FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முத்தலாக் தடை சட்டம்:  சீர்காழி சுன்னத் ஜமாஅத் கண்டனம்

மக்களவையில் முத்தலாக் தடை சட்டம் தாக்கல் செய்யப்பட்டதற்கு சீர்காழி சுன்னத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

மக்களவையில் முத்தலாக் தடை சட்டம் தாக்கல் செய்யப்பட்டதற்கு சீர்காழி சுன்னத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சீர்காழி சுன்னத் வல் ஜமாஅத் (அனைத்துப் பள்ளிவாசல்) கூட்டமைப்பு சார்பில் அதன்  ஒருங்கிணைப்பாளர்  எஸ். முகம்மது யூசுப்  வெளியிட்ட அறிக்கை:
மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள முத்தலாக் தடை சட்டத்தை அமல்படுத்தக் கூடாது. இந்திய ஜனாதிபதி இந்த சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது. இஸ்லாமியர்களுக்கு எதிரான இச்சட்டத்தை மத்திய அரசு அவசர கோலத்தில்  மத கோட்பாடுகளை மீறும் வகையில் கொண்டுவந்துள்ளது.  இஸ்லாமியர்களின் ஷரீஅத் சட்டத்தை அவமதிக்கும் இச்செயல் கண்டனத்துக்குரியது. பொது சிவில் சட்டத்தை ஒருபோதும் இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனவே, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள முத்தலாக் தடை சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments