FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

மனைவி கொலை; கணவர் கைது

நாகை மாவட்டம், திருக்குவளை அருகே மனைவியைக் கல்லால் அடித்துக் கொலை செய்த கணவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 

Updated On : 31 டிசம்பர் 2018, 8:50 am IST
பகிர்:

நாகை மாவட்டம், திருக்குவளை அருகே மனைவியைக் கல்லால் அடித்துக் கொலை செய்த கணவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 
திருக்குவளை வட்டம், எட்டுக்குடி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரவி (52). விவசாயத் தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (47). இத்தம்பதிக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இந்நிலையில், கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். சனிக்கிழமை ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ரவி, சித்ராவை கருங்கல்லால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில், பலத்த காயமடைந்த சித்ரா, நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சித்ரா ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து, சித்ராவின் மகன் வேலாயுதம் (23) அளித்தப் புகாரின் பேரில், திருக்குவளை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ரவியை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments