சாராயம் விற்றவர் கைது
நாகை மாவட்டம், குத்தாலம் அருகே சாராயம் விற்றதாக ஒருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம், குத்தாலம் அருகே சாராயம் விற்றதாக ஒருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
குத்தாலம் வட்டம், கோமல் கிராமத்தில் சாராய விற்பனை நடைபெற்று வருவதாக பாலையூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், காவல் ஆய்வாளர் நாகலட்சுமி மற்றும் போலீஸார் அங்கு சென்ற போது, கோமல் பெரியார் நகரைச் சேர்ந்த கனகராஜ் (40) என்பவர் தனது வீட்டருகே புதுச்சேரி மாநில சாராயத்தை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, விற்பனைக்கு வைத்திருந்த 110 லிட்டர் சாராயத்தை போலீஸார் கைப்பற்றி, கனகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.