பகலில் மட்டுமே செயல்படும் பொதுக் கழிவறை: பயணிகள் அவதி
நாகை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சிக்குள்பட்ட பொறையாறு புதிய பேருந்து நிலையத்தில் பொதுக் கழிவறை பகலில் மட்டுமே திறந்திருப்பதால் பயணிகள் அவதியடைகின்றனர்.
நாகை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சிக்குள்பட்ட பொறையாறு புதிய பேருந்து நிலையத்தில் பொதுக் கழிவறை பகலில் மட்டுமே திறந்திருப்பதால் பயணிகள் அவதியடைகின்றனர்.
பொறையாறு புதிய பேருந்து நிலையத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட பொதுக் கழிவறையை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கடந்த மாதம் திறந்து வைத்தார். இந்தக் கழிவறை பகல் நேரத்தில் மட்டுமே திறந்திருக்கிறது. இரவு நேரத்தில் கழிவறை பூட்டப்படுவதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக, பல்வேறு இடங்களில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையத்துக்கு வருபவர்கள், கழிவறை அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு, இயற்கை உபாதையைக் கழிக்க முடியாமல் திணறுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் திறந்தவெளியைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படுவதால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் கழிவறையை இரவு நேரங்களிலும் திறப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.