FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம் பள்ளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் மணியன்தீவு, நெய்விளக்கு அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பிரியம் அறக்கட்டளை சார்பில் நலத் திட்ட உதவிகள் புதன்கிழமை அளிக்கப்பட்டன.

Updated On : 7 ஜூன் 2018, 7:55 am IST
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் மணியன்தீவு, நெய்விளக்கு அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பிரியம் அறக்கட்டளை சார்பில் நலத் திட்ட உதவிகள் புதன்கிழமை அளிக்கப்பட்டன.
மணியன்தீவு அரசு  உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் வேதாரண்யம் ப்ரியம் அறக்கட்டளையின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. பின்னர், நலத் திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகுமார் தலைமை வகித்தார்.
இதேபோல், நெய்விளக்கு அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் குழந்தைகளின் பயன்பாட்டுக்காக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் நலத் திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, சுவாமி நாராயணநந்த சரஸ்வதி தலைமை வகித்தார்.
நிகழ்ச்சிகளில், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ராமமூர்த்தி, ராஜமாணிக்கம், ப்ரியம் அறக்கட்டளை நிறுவனர் பிரபு, பொறுப்பாளர்கள் சிவகுமார், சித்தார்த்தா, வேதவிநாயகம், தலைமையாசிரியர் சக்திதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments