பார்வதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
நாகை அருகே உள்ள சிக்கலில் அருள்மிகு பர்வதவர்த்தனி அம்பாள் உடனுறை ஸ்ரீ பார்வதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகை அருகே உள்ள சிக்கலில் அருள்மிகு பர்வதவர்த்தனி அம்பாள் உடனுறை ஸ்ரீ பார்வதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சிதிலமடைந்திருந்த இக்கோயில், சிக்கல் கிராமவாசிகள், இறையன்பர்கள் உதவியுடன் கடந்த சில மாதங்களாக புனரமைக்கப்பட்டு வந்தது.
இப்பணி நிறைவடைந்ததையடுத்து, கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கின.
திங்கள்கிழமை காலை பூர்ணாஹுதி தீபாராதனைகளுடன் 4 -ஆம் கால பூஜைகள் முடிவுற்றன. பின்னர், கடங்கள் புறப்பாடு நடைபெற்று, விமான கும்பாபிஷேகம், மூலவர் கும்பாபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.
இதில், திருப்பனந்தாள் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், திருநள்ளாறு ராஜன் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.