இளைஞர்கள் சாலை மறியல்
நாகை மாவட்டம், சீர்காழியில் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) வாயிலாக தகவல் பரிமாறிக் கொண்டு, கருப்புச் சட்டை அணிந்து சாலை
நாகை மாவட்டம், சீர்காழியில் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) வாயிலாக தகவல் பரிமாறிக் கொண்டு, கருப்புச் சட்டை அணிந்து சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள் 65 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, சீர்காழியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட கருப்புச் சட்டை அணிந்து ஒன்றிணையுமாறு கட்செவி அஞ்சல் மூலம் தகவல் பரவியது. அதன்படி கருப்புச் சட்டை அணிந்த 75-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அக்செப்ட் அமைப்பைச் சேர்ந்த ஜெக. சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, புதிய பேருந்து நிலையம் அருகே பிரதான நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட அவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று முழக்கமிட்டனர். தகவலலறிந்து வந்த போலீஸார், மறியலில் ஈடுபட்ட 65 பேரை கைது செய்தனர். சாலை மறியலால் சீர்காழி- சிதம்பரம்- மயிலாடுதுறை சாலையில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.