துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துநாகையில் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து, ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் நாகை அரசு ஊழியர் கட்டடம் முன்பாக ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து, ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில் நாகை அரசு ஊழியர் கட்டடம் முன்பாக ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பாக கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை பின்பற்றாத காவல் துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவராணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.டி. அன்பழகன், பா. ரவி மற்றும் வெ. சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணித் தலைவர் பார்த்தசாரதி, வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் அ. சுந்தரம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் எஸ். சித்ரா, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ப. அந்துவன்சேரல் மற்றும் சார்பு சங்கங்களின் நிர்வாகிகள் பேசினர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளரும், ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினருமான க. மீனாட்சிசுந்தரம் நிறைவுரையாற்றினார்.
அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சி. குருபிரசாத் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.