வேதாரண்யம், தலைஞாயிறில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து
நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு பகுதிகளில் செப். 8, 9 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என
நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு பகுதிகளில் செப். 8, 9 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய, திருவாரூர் பராமரிப்புக் கோட்ட நிர்வாகப் பொறியாளர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கூனாஞ்சேரியில் கூட்டுக் குடிநீர்த் திட்ட குழாய்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதையொட்டி, நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சி மற்றும் வேதாரண்யம், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் செப். 8, 9 ஆகிய தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.