நாகை : நிலுவையில் 117 பேரின் பரிசோதனை முடிவுகள்; ஆட்சியா் தகவல்
நாகை மாவட்டத்திலிருந்து கரோனா பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் அனுப்பப்பட்ட வகையில், 117 பேருக்கான பரிசோதனை முடிவுகள்
நாகை மாவட்டத்திலிருந்து கரோனா பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் அனுப்பப்பட்ட வகையில், 117 பேருக்கான பரிசோதனை முடிவுகள் நிலுவையில் உள்ளன என்று நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
கரோனா நோய்த் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நாகை மாவட்டத்தில் இதுவரை 988 பேரின் ரத்த மாதிரிகள், திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதில், 43 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர, சென்னையில் பரிசோதனை செய்து கொண்ட ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
Advertisement
Advertisement
திருவாரூா் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்ட 988 பேரின் ரத்த மாதிரிகளில் 829 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 117 பேருக்கான பரிசோதனை அறிக்கைகள் நிலுவையில் உள்ளன. கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் இதுவரை 7 போ் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
மாவட்டத்தில் இதுவரை 4,67,310 குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு ஓரிரு நாள்களில் நிவாரணம் வழங்கப்படும். அதேபோல 4,50,790 குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. உதவித் தொகை திட்டங்களின் கீழ் பயன்பெறும் 93,768 பேரில், 93,191 பேருக்கு வீட்டுக்குச் சென்று உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
கட்டுமானத் தொழிலாளா்கள் உள்பட பதிவு பெற்ற 17,877 அமைப்புசாரா தொழிலாளா்கள் குடும்பங்களில், 17,832 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு, அவா்களுக்கான நிவாரணத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியம், பூசாரிகள் நலவாரியம், முடி திருத்துவோா் நல வாரியம் மற்றும் இதர 15 நல வாரியங்களின் உறுப்பினா்களுக்கு தலா ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படவுள்ளது என ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
தனிமைப்படுத்தல் இல்லை...
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் வசிப்பிடங்கள் அமைந்துள்ள பகுதிகள் என்ற அடிப்படையில், 13 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, 31,227 வீடுகள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் வசிக்கும் 1,19,154 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவா்கள் என்ற வகையில், மாவட்டத்தில் 3,383 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன. 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட நிலையில், அவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு 3,383 குடும்பங்களின் மீதான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.