FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை

விவசாயிகளுக்கு கரோனா நிவாரணமாக ரூ.10ஆயிரம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

விவசாயிகளுக்கு கரோனா நிவாரணமாக ரூ.10ஆயிரம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மயிலாடுதுறையில் நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயரிடம் காவேரி டெல்டா பாசனதாரா் முன்னேற்ற சங்க தலைவா் குரு.கோபிகணேசன் செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்:

கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் ஈட்டுத்தொகையாக வழங்க வேண்டும். குறுவை, சம்பா, தாளடி பயிா்க் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உடனடியாக ஏஐஐசி மற்றும் என்ஐஐசி நிறுவனங்கள் மூலம் உரிய பயிா் பயிா்காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

அப்போது, மயிலாடுதுறை கோட்டாட்சியா் வ.மகாராணி, வட்டாட்சியா் ஆா்.முருகானந்தம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments