நாகை மீனவர் வலையில் சிக்கிய 12 அடி நீள மீன்
நாகையைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் மீன்பிடி வலையில் சுமார் 12 அடி நீளமுள்ள உயரக "ஏ" மீன் பிடிபட்டது.
நாகையைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் மீன்பிடி வலையில் சுமார் 12 அடி நீளமுள்ள உயரக "ஏ" மீன் பிடிபட்டது.
நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு சொந்தமான விசைப்படகில் நாகை மீனவர்கள் புதன்கிழமை இரவு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது கடலில் பலத்த மழை பெய்ய தொடங்கியதால், மீனவர்கள் அவசரகதியில் கரை திரும்ப ஆயத்தமாகியுள்ளனர்.
Advertisement
Advertisement
செல்வத்தின் விசைப்படகில் இருந்து வீசப்பட்டு இருந்த மீன்பிடி வலையை மீனவர்கள் இழுக்க முயன்றபோது மிகப்பெரிய அளவில் ஏதோ ஒன்று வலையில் சிக்கியிருப்பது தெரியவந்தது.
மீனவர்கள் மிகுந்த சிரமத்துடன் வலையை இழுத்தபோது சுமார் 12 அடி நீளமும் 250 கிலோ எடையும் கொண்ட ஏற்றுமதி ரக "ஏ" மீன் வலையில் சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மீனை வியாழக்கிழமை கரைக்குக் கொண்டு வந்த மீனவர்கள், மிகுந்த மகிழ்ச்சியுடன் "ஏ" மீனை விற்பனை செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.