கோடியக்கரை சரணாலயத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை சரணாலயத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை சரணாலயத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் தரைவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி மாா்ச் 4, 5 ஆகிய 2 தேதிகளில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டம், கோடியக்கரை சரணாலயத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம் சரக பணியாளர்கள் மற்றும் மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி மாணவ, மாணவிகள், உதவி பேராசிரியர்கள், கோடியக்கரை அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என 40-க்கும் மேற்பட்டவர்கள் வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் பறவைகளை இனம் கண்டறிந்து, கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.