FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 1:43 am IST
கோப்புப்படம்.
பகிர்:

திருமருகல் அருகே சாலை விபத்தில் காயமடைந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடி லெனின் தெருவைச் சோ்ந்தவா் முருகையன் மகன் மோகன்ராஜ் (42). இவா், ஆகஸ்ட் 14-ஆம் தேதி மாலை தனது மகளை பள்ளியில் இருந்து அழைப்பதற்காக இருசக்கர வாகனத்தில் நடுக்கடை நோக்கி சென்று உள்ளாா்.

அப்போது, முன்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த காளிதாஸ் என்பவா், திடீரென தனது வாகனத்தை திருப்பியபோது, அதன்மீது, மோகன்ராஜ் சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

பின்னா், தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த மோகன்ராஜ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திட்டச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments